Advertisment

நீச்சல் கற்றுக்கொள்ள முயன்ற மாணவி மரணம்

Student passed away while trying to learn to swim

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த சி.நரையூர் கிராமத்தில் வசித்துவரும் அன்புச்செல்வன் என்பவரின் மகள் கமலி. இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம்வகுப்பு பயின்றுவந்தார். இவர் நேற்று மதியம் நீச்சல் பழகுவதற்காக நான்கு சக்கர வாகன டியூப் ஒன்றை அணிந்து கொண்டு நீச்சல் பழகியுள்ளார்.

Advertisment

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அதன் பின்னர் அருகில் உள்ளவர்கள் இரண்டு மணி நேரமாக மீட்க முயற்சித்தும் இயலாததால்தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றிஉடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த சிறுப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe