/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69_75.jpg)
வேலூர் மாவட்டம் வேலூர் பெருமுகை பகுதியில் உள்ள தனியார் நரசிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் நகீம் முகமது உசேன் கல்லூரி முடிந்து தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நின்ற பார்சல் லாரி மீது மாணவரின் இருசக்கர வாகனம் கீழே விழுந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் கல்லூரி மாணவர் நகீம் முகமது உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)