திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கடந்த மாதம் 24ஆம் தேதி நண்பர்களுடன் இணைந்து திருமுருகன் என்ற 12ஆம் வகுப்பு மாணவன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார். அன்றைய இரவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 5 நாட்களாக சிகிச்சையில் இருந்த திருமுருகன், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.