
தனியே நீச்சல் கற்றுக் கொள்ள முயன்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திட்டக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த எஸ்.நறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மகள் கமலி. எட்டாம் வகுப்பு படித்து வந்த கமலி சொந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக ட்யூப் ஒன்றை கட்டிக்கொண்டு குதித்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் தனியாக ட்யூப் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த நிலையில், மாணவி குதித்த வேகத்தில் ட்யூப் அவிழ்ந்துவிட, சிறுமி நீரில் மூழ்கி ட்யூப் மட்டும் வெளியே மிதந்துள்ளது.
ட்யூப் மட்டும் தண்ணீரில் மிதந்து இருந்து கொண்டிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாகத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வந்த தீயணைப்பு துறையினர் மாணவியின் சடலத்தை மீட்ட உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Follow Us