Student jumping from school floor-Police investigation

தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம்ஊரப்பாக்கம் அடுத்த கங்கையம்மன்பகுதியில் சரஸ்வதி என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த நசிமா என்பவரின் மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்வில் அந்த மாணவி கணித பாடத்தில் 23 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாகவும், நன்கு படித்து வந்த மாணவி திடீரென தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிறுமிபள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத்தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காரணமாகப் பள்ளியிலிருந்த மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.