Student issue in road incident Condolences to the Chief Minister

சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11.10.2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 20) என்ற மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Advertisment

சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன்பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார்.