Advertisment

மாணவர் உயிரிழப்பு: மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்கு! 

student incident nellai district police investigation

கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12- ஆம் வகுப்பு மாணவர் செல்வ சூர்யா என்ற மாணவர் படுகாயமடைந்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (30/04/2022) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்த நிலையில், மாணவர் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த பாப்பாக்குடி காவல்துறையினர், அதே பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான சைபுதீன், பவுசில்சமீர், சுடலைமணி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe