student incident madras iit police investigation

Advertisment

பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருவரை கைது செய்தது காவல்துறை.

ஜூலை 24- ஆம் தேதி அன்று சென்னையில் ஐ.ஐ.டி.யில் பயின்று வரும் மாணவி ஒருவர், ஐ.ஐ.டி. வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது.

பாலியல் தொந்தரவு தொடர்பாக, மாணவி தரப்பில் புகார் அளிக்க முன்வராததையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தின் காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

மேலும், ஐ.ஐ.டி. வளாகத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, ஐ.ஐ.டி. வளாக கேண்டீனில் பணியாற்றும் இளைஞர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.