/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-file-sad_6.jpg)
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம், தொண்டமாநத்தம் மதுரா எஸ்.என்.நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 14). இவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று (01-10-2023) அப்பகுதியிலுள்ள நாகம்மாபேட்டை குளத்தில் குளித்த போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மாணவி ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் “என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)