சென்னையில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பரவலாக இன்று மதியம் முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லி செட்டிமேடு பேருந்து நிலையம் அருகேநின்று கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பசிம் வினய் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.