Advertisment

மாறுவேடப் போட்டியில் மறைந்த டி.ஐ.ஜி. விஜயகுமார்; நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மாணவி

student dressed up as the late DIG Vijaykumar in the costume contest

தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சு, ஓவியப் போட்டி, நடனம் ஆகிய போட்டிகள் நடந்தன. மாறுவேடப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் போன்றும்மரங்கள், விண்வெளி வீரர்கள் போன்றும் வேடம் அணிந்து வந்தனர்.

Advertisment

அந்த வரிசையில் தேனி மேலப்பேட்டையில்உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும்மாணவி ஸ்ரீகபி, சமீபத்தில் மறைந்த கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் வேடத்தில் வந்திருந்தார். அத்துடன் 'உங்கள் ஆன்மா எங்களோடு வாழ்கிறது' (your soul lives with us) என்ற வாசகத்துடன் கூடிய விஜயகுமார் உருவப் படத்தை எடுத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் மரியாதை செலுத்தினார். அது மாறுவேடப் போட்டி நடந்த மண்டபத்தைஒரு நிமிடம் அமைதியில் ஆழ்த்தியது.

Advertisment

நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தப்பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த மாதம் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அவருடையநேர்மைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாறுவேடப் போட்டியில் அவருடைய வேடமிட்டு மிடுக்காய் மாணவி நடந்து வந்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

police Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe