தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சதீஷ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ் என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர். தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asasasadsdsd.jpg)
மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
இரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போராடி வருகின்றனர்.
இந்த பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஸ் என்ற இளைஞரை போலீசார் தற்போது கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களின் சிட்டிலிங் பகுதியில் ஒரு புறக்காவல் நிலையம் வேண்டும். பெண்கள் இரவில் அதிகம் நடமாடும் பகுதிகளாக இருப்பதால் பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே இங்கு புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)