Student complained

மாணவியிடம் தகாத வார்தையில் பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisment

அந்த புகார் மனுவில், தமிழகத்தின் தொடர்ச்சியாக பல்கழைகத்திலும் மாணவர்கள் மீது பாலியல் துன்புறத்தல் என்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஹரிஜா (உளவியல் துறை - 1st year ) அவர்களுக்கு உளவியல் துறை தலைவர் தவறான வார்த்தைகளால் பேசுவது மற்றும் பாலியல் துன்புறத்தலும் அவரால் அரங்கேறுகின்றது. எனவே வடவள்ளி காவல் நிலையத்தில் மாணவி ஹரிஜா அளித்த புகாரின் மீது தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisment