
திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும், 10 ஆம் வகுப்பு மாணவியும் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தமாணவன் ஒருவனும், 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியும் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்த நிலையில் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த மாணவி மாணவனின் முன் கையை அறுத்துக் கொண்ட நிலையில், சக மாணவிகள் அதனை ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். ஆசிரியர்கள் வருவதற்குள் இருவரும் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்.இருவரையும் மீட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)