Advertisment

தந்தையை தரக்குறைவாகப் பேசிய ஆசிரியர்; மண்டையை உடைத்த மாணவன்

The student attacked the teacher

Advertisment

சிவகங்கையில் ஆசிரியரின் மண்டையை பள்ளி மாணவர் ஒருவர் அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என்றும்., மாணவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி சண்டையை வளர்த்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர் ஒருவரும் ஆசிரியர் கலையரசனும் பள்ளியின் நுழைவு வாயிலில் வைத்துப் பேசிக்கொண்டு இருந்தபோது., அப்போதுஆசிரியர் கலையரசன்,மாணவரின் தந்தையைத்தவறுதலாகப் பேசியதாகவும் இதன் காரணமாகவே மாணவன் தடி கொண்டு ஆசிரியரின் தலையில் ரத்தம் வழியும் அளவு அடித்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் காயமடைந்த ஆசிரியர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

manamadurai police
இதையும் படியுங்கள்
Subscribe