சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்துக்குள் கத்தியை வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மதியம் பிராட்வேயில் இருந்து பூந்தமல்லியை நோக்கி சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயணித்தனர். அப்போது அவர்களுக்குள் 'ரூட்டு தல' தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள், பட்டாக் கத்திகளை கொண்டு எதிர் தரப்பினரை சரமாரியாக தாக்க தொடங்கினர். பேருந்தில் அமர்ந்துகொண்டு சகஜமாக பேசிக்கொண்டு வந்த மாணவர்கள் திடீர் என்று அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக இரண்டு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சென்னை முழுவதும் உள்ள 90க்கும் மேற்பட்ட ரூட்டு தலைகளை காவல்நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர், இனி தவறு செய்யமாட்டோம் என்று காவல்துறையினர் முன்பு அந்த மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.