Advertisment

ஆபாச படம் அனுப்பிய மாணவர்! ஆசிரியை அதிர்ச்சி!

cell phone

Advertisment

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ் அப்பில் யாரோ தவறாக அனுப்புவதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அடுத்த சில நாட்களில் வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை தனது குடும்பத்தாரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆபாச புகைப்படங்கள் வந்த எண் எங்கிருந்து வந்தது. அந்த எண் யாருடையது என்று தீவிர விசாரணையில் இறங்கினர். பின்னர் அந்த நபரின் முகவரியை கண்டுபிடித்து, அசோக்நகர்சென்றனர். அங்கு ஆகாஷ் என்பவரை பிடித்தனர். பின்னர் ராஜேஷ் என்பவரையும் பிடித்தனர். போலீசார் இவர்கள் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதைக் கேட்டு இருவரின் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டுபிடித்து அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

arrest send film student teacher cell phone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe