Advertisment

போதையில் பள்ளியின் கதவை உடைத்த மாணவர் கைது

Student arrested for breaking school door while intoxicated

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ளது வீரங்கிபுரம்என்ற ஊரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியின் போது விடுமுறைக்காக பள்ளி மூடப்பட்டிருந்தது. அப்போது பள்ளியின் வகுப்பறை கதவை வாலிபர் ஒருவர் சக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பெரிய கற்களால் அடித்து நொறுக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ரேவதி கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் 20 வயது ஏழுமலை என்பவரை நேற்று கைது செய்தனர். ஏழுமலைக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக அவருடைய சக நண்பர்கள் நாராயணன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

இதில் கைது செய்யப்பட்ட ஏழுமலை திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

arrested student villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe