
தமிழக பள்ளிகளில் விரைவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சர் செங்கோட்டை அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி முதல் 1,6 மற்றும் 9-ஆம் வகுப்புக்களுக்கானமாணவர் சேர்க்கை தொடரும் என்றும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு 24ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)