dew22

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை செய்யாமல் சில புரோக்கர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு ரூபாய் 10,000 பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இதுதொடர்பாக அத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான பிரபுவிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அக்கல்லூரிக்கு சென்ற அவர், கிராம பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அரசு கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்என்று அக்கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

Advertisment

கிராம பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு மறுக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.