
தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி அதற்கு அடிமையான 17 வயது மாணவர் மனநலம் பாதிக்கப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி மனதை பதைபதைக்க வைக்கிறது.
மருத்துவமனை படுக்கையில் கைகளை அசைத்துக் கொண்டு, துப்பாக்கியால் சுடுவதுபோல சைகை செய்து கொண்டிருப்பதைப் போல் மாணவர் ஒருவர் படுத்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் நெல்லையில்தான் நிகழ்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 17 வயது மாணவன் செய்கைகள் அங்கு இருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்லைனில் கேம் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர், ஆன்லைன் கேமில் வருவது போல துப்பாக்கியால் சுடுவது போன்ற செய்கைகளைச் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவில் சிகிச்சைக்கு வந்த அந்த மாணவர் அதிகாலை யாருக்கும் தெரியாமலே மருத்துவமனையில்இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)