மாட்டிவிட்ட பள்ளி மாணவன் குடிநீர் பாட்டிலில் பூச்சி மருந்து; போலீசார் விசாரணை

Stuck student mixed pesticide in drinking water bottle; Police investigation

அரசு பள்ளியில் சக மாணவனின் குடிநீர் பாட்டிலில் பூச்சி மருந்தை மாணவர்கள் சிலர் கலந்த சம்பவம் சங்ககிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் நான்கு பேருக்கு இடையே சண்டை ஏற்பட்டு அதன் மூலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு மாணவர்களில் சிலர் வீட்டு பாடம் எழுதாதது குறித்து ஒரு மாணவர் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவருக்கு தெரியாமல் அவரது குடிநீர் பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்துள்ளனர். தெரியாமல் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை அருந்திய அந்த மாணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு மாணவர்கள் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கருத்து மோதலில் சக மாணவர்களே தண்ணீர் பாட்டிலில் பூச்சி மருந்து கலந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police sangakiri
இதையும் படியுங்கள்
Subscribe