ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன், கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை போராட்டம் தொடரும்என கூறினார்.

படங்கள்: ஸ்டாலின்