Advertisment

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி! 

Struggle in trichy collector office

Advertisment

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்தாவூத். இவரது மனைவி பாத்திமா. இந்நிலையில், இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அந்தத் தம்பதியினர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, நாங்கள் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மதம் தோறும் அதற்குப் பணம் கட்டி வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களது வாகனத்தின் லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் ஆகியவை தொலைந்துவிட்டதால் கடந்த மூன்று மாதமாக அதற்குப் பணம் கட்டவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் ஆட்கள் தொடர்ந்து பணத்தைக் கட்டும்படி வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் எனது லாரியை கொண்டு சென்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன்.

ஆனால் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் வண்டியை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டனர். என் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த வண்டியை என்னுடைய அனுமதி இல்லாமல் ஒப்படைத்து மட்டுமல்லாமல் தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர். எனவே உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு காவல்துறையினரை கண்டித்துத் தீக்குளிக்க முயன்றோம்” என்றனர். அதன் பின் அவர்களிடம் நடந்த சம்பவங்களை மனுவாக எழுதிக் கொடுக்கும்படிகூறி அவர்களிடம் இருந்து காவல்துறையினர் அந்த மனுவை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe