நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று (28.3.2022) காலை தொடங்கி இரண்டாவது நாளான இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்க கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள குரளகம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை பாரிமுனையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/1_0.jpg)