
மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் விவசாயிகளுக்கு ஆதராவாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள துரை வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, நாளை 02.03.2025 ஞாயிறு மாலை 4 மணிக்கு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், எனது தலைமையில், ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய பெருங்குடி மக்களும், பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதி வாழ் பொதுமக்களும், கட்சித் தோழர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.