Advertisment

இ.எம்.ஐ செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி போராட்டம்!! (படங்கள்)

Advertisment

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் உச்சத்தை அடைந்ததால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அதே போல் தினக்கூலியின் மூலம் வாழ்க்கையை நடத்தியவர்களும் வாழ்வாதாரம் இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் பலர் தங்களது வாகங்களுக்கு இ.எம்.ஐ கட்ட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு கால் டாக்ஸி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் வாகன கடனுக்கான இ.எம்.ஐ தொகை கட்ட ஒரு வருட காலம் அவகாசம் வழங்க கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

call taxi driver Chennai protest
இதையும் படியுங்கள்
Subscribe