Advertisment

இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும்! -புஷ்பாஞ்சலி கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்!

struggle in sivakasi

Advertisment

சிவகாசி சிவன் கோவிலுக்கு முன்பாக, விருதுநகர் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பில், முப்பெரும் தலைவர்களுக்கு புஷ்பாஞ்சலி என்ற பெயரில், மறைந்த ராமகிருஷ்ணன், ராமகோபாலன், வீரபாகு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தினார்கள்.

கைகளில் கொடிகளை ஏந்தியவர்களிடையே, விஸ்வ இந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக் பேசும்போது, அமரர்கள் ஆகிவிட்ட மூவரின் தியாகத்தை எடுத்துரைத்துவிட்டு, “இந்திய நாட்டை இந்தியர்களே ஆளவேண்டும்.” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

Advertisment

அஞ்சலி கூட்டம் முடிந்தவுடன், ‘தேசிய கல்விக் கொள்கை – 2020, அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்’ என்ற தலைப்பில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தனர்.

hindu party
இதையும் படியுங்கள்
Subscribe