Advertisment

முதல்வருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போராட்டம்... ஏ.ஐ.ஒய்.எஃப். ஏற்பாடு!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(A.I.Y.F) தமிழ்நாடு மாநில குழு சார்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்படி மாநிலம் முழுக்க உள்ள AIYF நிர்வாகிகள், தொண்டர்கள் 23.4.20 வியாழக்கிழமை சிலகோரிக்கைகளை முன்வைத்து முதல்வரின் இ.மெயில் ஐ.டி.க்கு மின் அஞ்சல் அனுப்ப இருக்கிறார்கள். அரசுக்கு இந்த அமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகள்,

Advertisment

தமிழகஅரசே...,

 The struggle of sending e-mails to CM ... A.I.Y.F organizing !!

1.கரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்து, போதிய மருத்துவ உபகரணங்களை உடனே வாங்கு!

Advertisment

2.கரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50லட்சம் நிவாரணம் வழங்கு.

3.கரோனா சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டு கரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு 1.கோடி நிவாரணம் வழங்கு.

4.ஊரடங்கு உத்தரவால் அடிப்படை வருமானத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 வழங்கு.

5. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி மார்ச்,ஏப்ரல்,மே,மாதங்களுக்கான 500 யூனிட்க்கு குறைவாக உள்ளமின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

nakkheeran app

என்ற இந்த ஐந்து கோரிக்கைகளை வைத்து சி.எம்.செல்லான cmcell@tn.gov.in என்ற இ.மெயில் முகவரிக்கு அனுப்ப உள்ளார்கள். இது சம்பந்தமாக AIYF மாநில துணை தலைவர் வழக்கறிஞர் மோ.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில்,

"தோழர்களே, மாணவர்களே, இளைஞர்களே மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே தமிழக முதல்வருக்கு செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் மின்னஞ்சல் அனுப்புவதோடு உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களையும் இப்போராட்டத்தில் பங்கேற்கவைக்குமாறு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.

corona virus cm mail head send AIYF
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe