ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்

nn

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ''மனிதன் எப்படி இருக்க வேண்டும் என கூறும் நூல் திருக்குறள். ஆனால் அது ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால் திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை நூலாக மட்டும் காட்ட நினைப்பது தவறு. நம் நாட்டின் ஆன்மீக சிந்தனைகளை கொண்ட நூல் திருக்குறள். ஆனால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உண்மையான அர்த்தத்தை விளக்கவில்லை. திருக்குறளின் உண்மையை கூறும் வகையில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிப்பெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனை தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறள் இந்தியாவின் அடையாளம்” என பேசினார்.

nn

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பிவைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் கூறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, தபால் நிலையம் மூலம் ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை அனுப்பி வைத்தனர்.

governor Mayiladuthurai thirukural
இதையும் படியுங்கள்
Subscribe