struggle, picketing and arrests in Kattumannargudi demanding  cauvery issue

கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத்திறந்து விட வலியுறுத்திக் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் சிதம்பரத்தில் புதன்கிழமை(11.10.2023) கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் அமைப்பினர் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத்திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பின் திறக்கப்படும் குறைந்தபட்ச நீரைக் கூடத் தடுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் சிதம்பரம் பகுதியில் காய்கறி மார்க்கெட், நகைக் கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட சுமார் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் கற்பனைசெல்வன், சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி. வாஞ்சிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) வி.எம். சேகர், தமிமுன் அன்சாரி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்கத்தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் காஜா மொய்தீன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் அன்பு சித்தார்த்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் மேலரத வீதியில் கர்நாடக அரசைக் கண்டித்தும் தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு மேலவீதி மற்றும் வடக்குவீதி பகுதியில் திறந்திருந்த கடைகளை அடைக்க வலியுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

struggle, picketing and arrests in Kattumannargudi demanding  cauvery issue

பின்னர் அனைவரும் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாகக் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அப்போது இவர்களைக் காவல்துறையினர் தடுத்து கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர். இதேபோல்காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு பகுதியில் முழு கடையடைப்பு நடந்தது. காட்டுமன்னார்கோவில்பகுதியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, விவசாய சங்கத் தலைவர் கே.வி. இளங்கீரன், தமிழ்நாடு பனை நல வாரிய உறுப்பினர் பசுமைவளவன், வீராணம் ஏரி ராதா மதகு பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் ரெங்கநாயகி,அனைத்துக் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஊர்வலமாக நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்துதபால் அலுவலகத்தின்நுழைவாயில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.