Published on 27/04/2021 | Edited on 27/04/2021

மதுரை உசிலம்பட்டி அருகே துணைமுதல்வர் ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை உசிலம்பட்டியில் அருகே வீடு வாங்கிய பிரச்சனையில் விவாயியான சகாதேவன் விஷம் குடித்து இறந்த நிலையில், சகாதேவனை தற்கொலைக்கு தூண்டியவர்களை போலீசார் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என சகாதேவனின் உறவினர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த துணைமுதல்வர் ஓபிஎஸ் காரை மறித்து சகாதேவனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். துணை முதல்வரின் காரை மறித்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.