தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் 174 பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும்”என தெரிவித்தனர்.