Advertisment

தமிழிசை  மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் - பாமகவினர் எச்சரிக்கை

pmk

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் சமூக நீதி போராட்டத்தை கொச்சை படுத்திய தமிழிசையை கண்டித்து பா.ம.க சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் போது ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் சமுகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்ககளை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அன்புமணி ராமதாசை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பாமக மாநில துணைதலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசின் சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ராமதாசின் போராட்டங்களை கொச்சைபடுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் எனவும் எச்சரித்தனர்.

இப்போராட்டதின் போது காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் வாக்குவாததில் ஈடுபட்டனர் இருப்பீனும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி மறுத்ததால் ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் அறவழியில் போராட்டம் நடத்தினர். மாநில துணை பொதுசெயலாளர்கள் ரகுபதி, எஸ்.பி விசாலாட்சி, அல்போன்சா பாலு, மாவட்ட செயலாளர்கள் கொங்கு கிஷோர், கணேஷ், வெங்கடேஷ் காந்தி, சம்பத், அஷோக்ராஜ் ப்ரதீப்குமார் கோவை மாவட்ட தலைவர் குமார், உள்ளிட்டோர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

kovai pmk ramadas thamizhisai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe