Advertisment

சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்... விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

struggle in front of the Collector's Office ... Resolution of the Federation of Agricultural Associations!

சிதம்பரம் மேலவீதியில் கடலூர் மாவட்டவிவசாயச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயசங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மணல்மேடு சரவணன், சிவாயம் மணிவண்ணன், வடக்குமாங்குடிநீலமேகம்,சிறுகாலூர்சிற்றரசு, வல்லம்படுகை வசந்தன், வடமூர் ரெங்கநாயகி, அரியகோஷ்டி நடராஜன், செங்கமேடுஅருள்பிரகாசம்உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

கூட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டுநிவர்மற்றும் புரவி புயல், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டபயிர்களுக்குப்பயிர்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவேண்டியஇழப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும். வருவாய் அடங்கல் ஆவணத்தை நிபந்தனையின்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

Advertisment

2021-2022 ஆம் ஆண்டு சம்பாசாகுபடிக்குத்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்பயிர்க்கடனைஉடனே வழங்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின் அடிப்படையில் உடனடியாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வரும் 11-ஆம் தேதி காலை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்எனத்தீர்மானம் நிறைவேற்றினர்.

chithambaram district District Collector Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe