ஒட்டுமொத்த சதியின் விளைவுதான் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இதுகுறித்து நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்தியா அதிக விபத்து நடக்கும் நாடு, அதிலும் அதிக விபத்து மரணம் நடப்பது தமிழகத்தில் தான். ஆனால் இங்கு சாலை விரிவாக்கம் செய்யக்கூடாது என்று போராடுகிறார்கள். ஒட்டுமொத்த சதியின் விளைவுதான் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள்.

தமிழகத்தில் வளர்ச்சி இல்லாத நிலையை கொண்டுவர புரட்சி ஏற்படுத்துகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு துணையாக அன்னிய நாட்டு சக்திகள் செயல்படுகின்றன. அதிமுகவும், திமுகவும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

Advertisment

அயல்நாடுகளுக்கு துணைபோகும் இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். தூத்துக்குடியில் இறந்தவர்களில் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தால் அரசு வழங்கிய ரூ.20 லட்சத்தின் நிலை என்ன?. அவர்களுக்கு பணம் உண்டு என்றால் சுட்டுக்கொன்றது தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.