struggle demonstration on behalf of Congress in Erode

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறு வழக்கில் எம்.பி பதவியை திட்டமிட்டு தகுதியிழப்பு செய்த பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.

Advertisment

மாவட்டத் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஈ.பி. ரவி, ஈ.ஆர்.ராஜேந்திரன், மண்டல தலைவர்களான ஆர்.விஜயபாஸ்கர், சசிகுமார், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தொடங்கி வைத்து பாஜக அரசின் ஜனநாயக அத்துமீறல்களை கடுமையாகச் சாடி கண்டன உரையாற்றினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.மாரியப்பன், வி.கே.செந்தில் ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை, மாநில காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட துணைத் தலைவர் கே.என்.பாஷா மற்றும் பலர் கலந்துகொண்டு பாஜக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.