Advertisment

சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கக்கோரி போராட்டம்...

Struggle to declare Saturday a holiday ...

அனைத்துதுறை அரசு ஊழியர்களுக்கும் ஏற்கனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாளாக இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அதை கட்டுப்படுத்த வேண்டி அரசு பள்ளிகள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. குறைந்த அளவிலேயே அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றனர்.

Advertisment

அதிலும் குறிப்பாக வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்றவர்கள் கடுமையான பணிச்சுமையில் இருந்தனர். அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்வின் காரணமாக பிறகு 25% ஊழியர்களை கொண்டும் அலுவலக பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு 50% கூடுதலாக்கி தற்போது முழுமையான அளவில் அலுவலர்கள் கலந்து கொள்ளும் அளவில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

இதன் காரணமாக அரசு சனிக்கிழமைகளிலும் அனைத்து அரசு அலுவலர்களும் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்க குழு சார்பாக ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததை போன்று மீண்டும் அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மற்றும் வேப்பந்தட்டை வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலககங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களில் சங்க ஒருங்கிணைப்பு குழு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe