திருச்சி மோட்டார் வாகன தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கி சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மோட்டார் வாகன தொழில் சங்க கூட்டமைப்பைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.