கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள வெளிக்கூணங்குறிச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகினர். இக்கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், விவசாய நிலத்தை அழித்து, புதிதாக கூடாரம் அமைக்கப்பட்டு, மதுபானகடை திறக்க அதிகாரிகள் முற்பட்டனர்.

Advertisment

protest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் பா.ம.க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டனர். பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலை செய்யும், தமிழக அரசின் சர்திவாதிகார போக்கை கண்டித்தும், மதுபான கடையை மூடக்கோரியும், முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, மதுபானகடை மூடி விடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்த, பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.