style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளபெருமுளை கிராமத்தில் 3 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அதனால் அப்பகுதி பொதுமக்களின் பொது அமைதி கெடுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
அதையடுத்து மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அப்பொழுது மதுபான கடைக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அருகில் திரண்டு வந்தனர். இதனால் போராட்டம் நடத்தியவர்களுக்கும், மதுபான கடைக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.