சிதம்பரம் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பரதக

நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் வழிபடச் சென்ற பெண் பக்தரைத் தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் வழிபடச் சென்ற பெண் பக்தரைத் தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும், தமிழக அரசு நடராஜர் கோயிலை மீட்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், தெற்கு வாயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில நிர்வாகி காளியப்பன், மக்கள் கலை இலக்கிய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பாடகர் கோவன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் பூசி இளங்கோவன், மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனர் கோவி மணிவண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் பாலஅறவழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe