தமிழகத்தில்கரோனாபாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைஅக்.31 ஆம் தேதி வரைநீட்டித்துக்கடந்தசெப்.29 ஆம் தேதிதமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி. நவம்பர் 1 ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிஉள்ளிட்ட தளர்வுகள் இடம்பெற்றிருந்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்துதமிழக பாஜக அண்ணாமலை ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்குவெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தடைவிதிக்கக்கூடாது. பள்ளி,கல்லூரி எனஅனைத்திற்கும் வழிகாட்டுநெறிமுறைகள், கட்டுப்பாடுகள்வழங்கப்பட்டுள்ளதைப்போன்றுகோவிலில் பக்தர்கள்தரிசனத்திற்குத்தடைவிதிக்காமல்கட்டுப்பாடுகளை விதித்து அனுமதிக்க வேண்டும் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் முக்கிய கோவில்களில்வாரம் 7 நாட்களும்பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, திரையரங்கு, பேருந்து சேவைக்கெல்லாம் அனுமதி தரும்போதுவழிபாட்டிற்குத்தடைவிதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, அனைத்து நாட்களிலும்பக்தர்களைக்கோவிலில் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும்அக்.7 ஆம்தேதி பாஜக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.