Advertisment

சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு! - திருச்சியில் நடந்த நூதனப் போராட்டம்!

Tamil Tigers struggle against rising prices of essential commodities

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

பெட்ரோல் விலை லிட்டர் 92 ரூபாய், கேஸ் சிலிண்டரின் விலை 710 ரூபாயில்இருந்து 50 ரூபாய் உயர்த்தப்பட்டுஇன்று 760 ரூபாயாக வினியோகிக்கப்படுகிறது. திடீரென, உயர்த்தப்படும் இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வைக் குறைத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Advertisment

price hike struggle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe