Advertisment

 காட்டுமன்னார்கோயிலில் கார்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

struggle against Karnataka government in Kattumannarkoil

காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் தரவேண்டிய காவிரி நீரைத்தராததைக் கண்டித்தும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர வலியுறுத்தியும், நீரின்றி கருகும் நெற்பயிருக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமைதாங்கினார்.

Advertisment

மாவட்ட செயற்குழு உறுப்பினர்ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, விமலக்கண்ணன், நகர அமைப்பாளர் மணிகண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ரேவதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe