Advertisment

ஐபிஎல் போட்டிக்கு எதிராக வி.சிறுத்தைகள் போராட்டம்: சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போராட்டங்களும் நடந்து வருகிறது.

Advertisment

திருவல்லிக்கேணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஐபிஎல் போட்டியை உடனே நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

போராட்டம் காரணமாக சேப்பாக்கம் மைதானம் கடற்கரை சாலையில் இருந்து வாலாஜா சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாலாஜா சாலையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இணை ஆணையர் அன்பு தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Chennai IPL viduthalai siruthai katchi. protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe