Advertisment

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை; தலித் கூட்டமைப்பு சாலை மறியல்

struggle against assassination of BSP state president Armstrong

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அனைத்து தரப்பினர் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அனைத்து தலித் கூட்டமைப்பு சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

struggle against assassination of BSP state president Armstrong

தகவலின் பெயரில் விரைந்து வந்த நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட தலித் கூட்டமைப்பினர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

bsp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe