Skip to main content

தேர்தல் அதிகாரி வராததால் வேட்பாளர்கள் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டம்

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
Milk Producers Cooperative Association elections

    
கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனு பரிசீலனை, மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறவும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடவும் தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கூட்டுறவு சங்க அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவர் மற்றும் இயக்குநர்கள் தேர்வு செய்வதற்காக பல கட்டமாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது. முதல் 2 கட்ட தேர்தல்கள் நடந்த போது தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஒரு தரப்பினர் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக் கொண்டதாக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாக ஒவ்வொரு ஊரிலும் பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்த தற்காலிக தடைவிதித்தது. அதனால் 9 ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி 23 ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை.


 

பூட்டிக் கொண்டு காத்திருந்தனர் :
 

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு கடந்த 9 ந் தேதி சுமார் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் பரிசீலனை 23 ந் தேதி நடத்தப்படும் என்று காத்திருந்தனர். அதிகாரி வரவில்லை. தொடர்ந்து செவ்வாய் கிழமை வாபஸ் பெறப்பவும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடவும் அதிகாரி வருவார் என்று காலை முதல் காத்திருந்தனர். மாலை வரை தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. அதனால் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்  ஞானஇளங்கோவன் தலைமையில் தி.மு.க நகரச் செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் தமிழ்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னால் நகரச் செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் பல கட்சி நிர்வாகிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Milk Producers Cooperative Association elections

    தொடர்ந்து கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளிடம் சங்க செயலாளர் கணேசன் பேசிவிட்டு 3 ந் தேதி வரை எந்த பட்டியலும் வெளியிடமாட்டாது என்று அதிகாரிகள் கூறுவதாக போராட்டக்காரர்களிடம் கூறினார். ஆனால் அவற்றை எழுதிக் கொடுக்கும்படி கேட்டனர். சங்க செயலாளர் எழுதிக் கொடுக்க மறுத்ததால் அலுவல கதவுகளை உள்ளே பூட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

பால் வண்டிகளை நிறுத்தி போராட்டம் : 
 

    மாலை 6.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றம் சொன்ன பிறகும் ஒருதலை பட்சமாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் இரவில் வேட்பாளர் பட்டியலை ஒட்டிவிட்டு செல்ல நினைத்தால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் பால் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தும் போராட்டமும் நடத்துவோம். இந்த போராட்டங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்