/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-prakash_32.jpg)
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கவாய்க்கால் வெட்டும் பணிக்காக வயலில் விளைந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது சுரங்க விரிவாக்கபணிக்காக கத்தாழை, கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்.எல்.சி. நிர்வாகம் விவசாயிகளின் விளைநிலங்களைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுக் குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் (2006 முதல் 2013 வரை நிலத்தைக் கையகப்படுத்தியதற்கு) ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்குகூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின்காரணமாகபல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதில் ஒரு சில பொதுமக்கள், விவசாயிகள் அதை எதிர்த்து வந்தனர். இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_135.jpg)
இந்த நிலையில் (ஜூலை 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி. நிர்வாகம், விவசாயிகள்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையொட்டி (ஜூலை 26) வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கவாய்க்கால் வெட்டும் பணிக்காக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சதமண் வெட்டும் இயந்திரங்கள் மூலம் 1.5 கி.மீ தூரத்திற்கு நெற்பயிற்களை அழித்து வாய்க்கால் வெட்டி அணை போடும் பணி நடைபெற்றது. இங்குபிரச்சனைஏற்படாத வகையில் விழுப்புரம் சரக டிஐஜி. ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துபா.ம.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது காவல்துறையினர் தடுத்துகைது செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, விருத்தாச்சலம் போக்குவரத்து சாலையில் டயர்களை தீ வைத்துகொளுத்தி கொஞ்சிக்குப்பம் பகுதியில் அரசு விரைவுப் பேருந்து மீது கல்வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)