Advertisment

ராஜபாளையத்தில் ஆளுநருக்கு வலுத்த எதிர்ப்பு! 

Strong opposition to the governor in Rajapalayam!

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, விருதுநகர் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். இதற்காக நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜபாளையம் அரசு பங்களாவில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

அப்போது அவர் செல்லும் வழியில் திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர், ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Advertisment

rajapalaym
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe